தடாகம்: சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது
கோவை மாவட்டம் தடாகம் பகுதிகளில் சூதாட்டம் நடைபெறுவதாக ஆர். எஸ் புரம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் தடாகம் பகுதியில் உள்ள ஒரு எம்டி லேண்டில் சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கு சௌந்தரராஜன், சித்தலிங்கம், முருகானந்தம், கதிரவன், பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக அமர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. உடனடியாக அவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 52 சீட்டுகள் மற்றும் 4790 ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. 5 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.