சிங்கப்பூர் செஸ் சாம்பியன்ஷிப் முதல் சுற்றில் தமிழ்நாட்டை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ் தோல்வியடைந்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் முதல் சுற்றில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரேனும், கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷும் மோதினர். இப்போட்டியில், சிறப்பாக விளையாடிய டிங் லிரேன் வெற்றியை வசமாக்கினார். இவர்கள் இருவருக்கும் இடையேயான இந்த போட்டி 42 நகர்த்தல்கள் வரை சென்றது. இன்னும் 13 சுற்றுகள் மீதமுள்ளது குறிப்பிடத்தக்கது.