தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 18 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. முன்னதாக மணிக்கு 30 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது வேகம் குறைந்துள்ளது. சென்னைக்கு 940 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.