கடந்த 2023 ஆண்டில் மட்டும் உலகம் முழுவதிலும் ஒரு நாளைக்கு 140 பெண்கள் மற்றும் சிறுமிகள் கொல்லப்பட்டதாக ஐநா அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "உலகளவில், 2023 ஆம் ஆண்டில் சராசரியாக 51,100 பெண்கள் மற்றும் சிறுமிகளின் மரணத்திற்கு அவர்களுக்கு நெருங்கியவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களே காரணமாக உள்ளனர். இது ஒரு நாளைக்கு 140 பெண்கள் வீதம் ஆகும். மேலும் 1 நிமிடத்திற்கு ஒருவர் கொலை செய்யப்படுகின்றனர் என்ற கணக்கில் உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.