சூலூர் - Sulur

சூலூர்: மத்திய அரசு விமான நிலைய விரிவாக்கத்தை தொடங்க வேண்டும்

கோயம்புத்தூர் சூலூர், வாரப்பட்டி பகுதியில் 380 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள ராணுவ தொழில் பூங்கா பகுதியில் தமிழக தொழில் துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா இன்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பல்வேறு முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தினார். கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் குறித்து பேசிய அமைச்சர், முதல்வரின் முன்னெடுப்பினால் ஏறத்தாழ 2088 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, முழுமையான நில எடுப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, தற்போது நிலம் மத்திய அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களின் பணத்தை செலவு செய்துள்ளோம். இனிமேலாவது மத்திய அரசு கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சூலூரில் அமைய இருக்கும் விண்வெளி தொழில் பூங்கா மற்றும் வாரப்பட்டி பகுதியில் அமைய உள்ள ராணுவ தொழில் பூங்கா ஆகியவற்றை ஆய்வு செய்ததாகவும், இது குறித்து தமிழக முதல்வரிடம் விரிவாக எடுத்துரைக்க இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், கோவைக்கு தொழில்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும், தேவையான மேலும் உதவிகள் குறித்தும் முதல்வரிடம் கோரிக்கை வைக்க இருப்பதாகக் கூறினார்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా