சூலூர்: தலைமை காவலர் மனைவி தூக்கிட்டு தற்கொலை!

82பார்த்தது
கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் சிவப்பிரகாசம். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு அவர் பணியில் உள்ளார். சமீபத்தில் நடந்த உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வில் இவர் தேர்வு எழுதி வெற்றி பெற்று உதவி ஆய்வாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்காக எழுத்து தேர்வு உள்ளிட்டு தேர்வு அனைத்தும் முடிந்து தேர்ச்சி பெற்ற நிலையில் தற்போது மருத்துவ விடுப்பில் உள்ளார். இவர் குடும்பத்துடன் சூலூர் காவல் நிலைய வளாகத்திலேயே உள்ள காவலர் குடியிருப்பில் தங்கி வசித்து வருகிறார். இவரது மனைவி சுகன்யா(30). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சுகன்யாவுடன் நேற்று ஏற்பட்ட திடீர் கருத்து வேறுபாடு காரணமாக சிறு வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. திடீரென வீட்டில் இருந்த அறைக்குள் சென்ற சுகன்யா அங்கு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார. அறைக்குள் சென்றவர் வெகு நேரம் ஆகியும் அறையில் இருந்து சுகன்யா வெளியே வராததால் கதவை திறந்து உள்ளே பார்த்தபோது சுகன்யா அங்குள்ள கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து உயிரிழந்த நிலையில் தொங்கி கொண்டு இருந்துள்ளார். இது தொடர்பாக சிவப்பிரகாசம் சூலூர் காவல் நிலையத்தில் தகவல் அளித்தார். புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சுகன்யாவின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி