அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு உதவி மையம் அமைக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். மேலும், படிப்புகள், மாணவர் சேர்க்கை உள்பட அனைத்து விவரங்களையும் உதவி மையத்தில் பெறலாம் எனவும் பயனாளிகள் எளிதில் அணுகும் வகையில் உதவி மையம் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். மாணவர்கள் வெளிப்படையாக பதிலளிக்கக்கூடிய ஒரு சூழலை ஏற்படுத்தும் விதமாக அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஓர் உதவி மையம் அமைக்கப்படவுள்ளது.