ப்ரோஸ்டேட் கேன்சர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே "நோ ஷேவ் நவம்பர்" மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதிலும் இருக்கும் ஆண்கள் தங்கள் தாடி, மீசையை இந்த மாதம் முழுக்க ஷேவ் செய்ய மாட்டார்கள். கட்டிங், ஷேவிங்குக்கு ஒருமாதம் முழுக்கப் பயன்படுத்தும் தொகையைச் சேமித்துவைத்துப் புற்றுநோய் ஆராய்ச்சி மையங்களுக்கு நன்கொடையாக அளிப்பார்கள். மாதம் முடிந்த பிறகு நீங்கள் விருப்பப்பட்டால் உங்கள் முடியை கூட தானமாகவும் வழங்கலாம்.