வில்லிவாக்கம் - Villivakkam

13 துறைகளில் தமிழ்நாடு முதலிடம்: உதயநிதி

13 துறைகளில் தமிழ்நாடு முதலிடம்: உதயநிதி

தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக செயல்படுவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மதுரையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் பேசிய அவர், வறுமை ஒழிப்பு, மகளிர் முன்னேற்றம், தரமான கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட 13 துறைகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக குறிப்பிட்டார். மகளிரை தொழில் முனைவோராக மாற்ற வேண்டும் என்பதே தமிழக அரசின் முக்கிய நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார். தொழில் தொடங்க சிறந்த மாநிலம் பட்டியலில் தமிழகம் இல்லை என பட்டியல் வெளியாகியுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

வீடியோஸ்


சென்னை