விஜய் கட்சியால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் வராது என அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். திராவிட கொள்கைகளை பேசும் தமிழக வெற்றிக் கழகத்தால் மற்ற திராவிட கட்சிகளுக்கு தான் பாதிப்பு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீட், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவது என திராவிட கட்சிகள் பேசும் அதே அரசியலை விஜய்யும் முன்னெடுப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்நிலையில் விஜய் கட்சியின் தவெக-வை தேர்தல் ஆணையம் அங்கீகாரம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது