2025க்குள் 300ஆக உயர்கிறது மாநகராட்சி வார்டுகள்

78பார்த்தது
2025க்குள் 300ஆக உயர்கிறது மாநகராட்சி வார்டுகள்
சென்னை மாநகராட்சியுடன், புறநகரை சுற்றியுள்ள சுற்றுலா மற்றும் வழிபாட்டு தலங்கள் உள்ள பகுதிகளை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வரும் 2025ம் ஆண்டிற்குள், சட்டசபை தொகுதி வாரியாக மண்டலங்கள் பிரிக்கப்படுவதுடன், மாநகராட்சியின் வார்டுகள் 200ல் இருந்து, 300 ஆக உயரும் என, நகராட்சி நிர்வாகத் துறை தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி, 174 சதுர கி. மீ. , பரப்பில், 155 வார்டுகளை உடைய, 10 மண்டலமாக செயல்பட்டது.


நாட்டின் பெருநகர பட்டியலில் சென்னையை சேர்க்கும் வகையில், புறநகரில் ஒன்பது நகராட்சிகள், எட்டு பேரூராட்சிகள் மற்றும் 25 ஊராட்சிகளை ஒருங்கிணைத்து, 424 சதுர கி. மீ. , பரப்பில், 2011ல் மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டது.

அதன்படி, ஆறு வட்டாரங்களுடன் 26 மண்டலங்கள்; 300 வார்டுகளில் சென்னை மாநகராட்சியை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி