பெரம்பூர் - Perambur

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு; சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல்

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு; சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல்

தமிழ்நாடு முழுவதும் வரும் அக்டோபர் 6ம் தேதி விஜயதசமியை முன்னிட்டு 58 இடங்களில் ஆர். எஸ். எஸ். அமைப்பு சார்பில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனைத்து மாவட்ட எஸ். பிக்கள், மாநகர காவல் கமிஷனர்களிடம் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டது. அந்த மனு மீது காவல்துறை ஆய்வு செய்யப்பட்டது. அப்போது உச்ச மற்றும் உயர் நீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றி ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்று காவல்துறை சார்பில் முன்வைக்கப்பட்டது. ஆனால், ஆர். எஸ். எஸ் அமைப்பு சார்பில் அளித்த மனுவில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரும் பல இடங்களில் அணிவகுப்புக்கான மாற்று தேதி மற்றும் மாற்று வழித்தடம் குறிப்பிடப்படவில்லை. இதனால் தமிழ்நாடு முழுவதும் 58 இடங்களில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஆர். எஸ். எஸ் அமைப்புக்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து ஆர். எஸ். எஸ் அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அப்போது நீதிமன்றம் காவல்துறை விதித்துள்ள விதிமுறைகளை முறையாக பின்பற்றி ஊர்வலம் நடத்த ஆர். எஸ். எஸ் அமைப்புக்கு பரிந்துரை செய்தது. ஆனால் ஆர். எஸ். எஸ் அமைப்புநீதிமன்றம் உத்தரவுப்படி காவல்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகளை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. 58 இடங்களில் ஆர். எஸ். எஸ் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

வீடியோஸ்


சென்னை