பெரம்பூர்: நடத்துநர் மீது தாக்குதல்: போலீசார் விசாரணை

77பார்த்தது
பெரம்பூர்: நடத்துநர் மீது தாக்குதல்: போலீசார் விசாரணை
ஓட்டேரி கொசப்பேட்டை சச்சிதானந்தம் தெருவைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (39), இவர் சென்னை போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். மணலியில் இருந்து பாரிமுனை நோக்கி செல்லும் (தடம் எண் 64 சி) பேருந்தில் நேற்று முன்தினம் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஓட்டுநர் ஹரிஹரன் என்பவருடன் பாரிமுனை நோக்கி சென்று கொண்டிருந்தார். 

அப்போது புளியந்தோப்பு நெடுஞ்சாலை காவல் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்ற போது அங்கு மது போதையில் இருந்த நபர் ஒருவர் பேருந்தில் ஏற முயன்றுள்ளார். அப்போது நடத்துனர் பிரேம்குமார், நீங்கள் அதிக குடிபோதையில் உள்ளீர்கள். அதனால் பேருந்தில் ஏறாதீர்கள் எனக் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. போதையில் இருந்த நபர் நடத்துனர் பிரேம்குமாரிடம் இருந்த டிக்கெட் தரும் மிஷினை வாங்கி கீழே போட்டு உடைத்து பிரேம்குமாரையும் தாக்கியுள்ளார். 

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போதையில் இருந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் புளியந்தோப்பு மோதிலால் தெருவைச் சேர்ந்த வீரமணி (30) என்பதும், செங்குன்றம் பகுதியில் கூலி வேலை செய்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து நடத்துனர் பிரேம்குமாரிடம் புகாரை பெற்று, வீரமணி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி