கொய்யாப்பழம் லைகோபின், வைட்டமின் சி உள்ளிட்ட ஆற்றல்வாய்ந்த ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நிறைந்தது. இது ப்ரீ ரேடிக்கல்ஸ்களை எதிர்த்துப் போராடுவதோடு சரும செல்களின் சேத்தையும் குறைக்கிறது. இதனால் விரைவாக சருமம் வயதான தோற்றம் அடைவதைத் தடுத்து இளமையாக வைத்திருக்க உதவுகிறது. கொய்யாவில் 80 சதவீதத்துக்கும் மேல் நீர்ச்சத்து இருக்கிறது. சருமத்தில் வறட்சி ஏற்படாமல் தடுத்து நன்கு நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும். கொய்யாப்பழத்தை சாப்பிட்டாலும், அதை பேஸ்ட் செய்து முகத்தில் அப்ளை செய்தாலும் பலன் தரும்.