தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 3வது தெருவை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (80). கொடுங்கையூர் மீனாம்பாள் சாலை நடைபாதையில் கடந்த 10 ஆண்டுகளாக செருப்பு கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் (ஜன.4) இரவு 9 மணி அளவில் கடைக்கு வந்த 2 பெண்கள் மாறி மாறி செருப்புகளை போட்டு பார்த்து விலை கேட்டுள்ளனர்.
அப்போது செருப்பு வாங்க வந்த மற்றொரு நபரிடம் அப்துல் ரகுமான் செருப்பு வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அதன் பிறகு அந்த 2 பெண்களும் எங்களுக்கு எந்த மாடலும் பிடிக்கவில்லை எனக் கூறி அங்கிருந்து சென்று விட்டனர். அவர்கள் சென்ற உடனே அப்துல் ரகுமான் ஓரமாக வைத்திருந்த கல்லாப்பெட்டியை பார்த்தபோது அது காணாமல் போனது தெரிந்தது. அதில் ரூ. 6,500 இருந்துள்ளது. மேலும் அங்கு வந்த பெண்கள் 2 பேரும் அந்த இடத்தில் வந்து செருப்புகளை மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து பணப்பையை அவர்கள்தான் திருடி சென்று உள்ளார்கள் என்பதை உறுதி செய்தகொண்ட அப்துல் ரகுமான் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, அந்த பெண்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.