சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

76பார்த்தது
சென்னையில் வருமான  வரித்துறை அதிகாரிகள் சோதனை
சென்னையில் 6-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பூந்தமல்லி அடுத்த சாத்தங்காடு பகுதியில் உள்ள தனியார் மெட்டல் நிறுவனத்தில், வருமான வரித்துறை இன்று (ஜனவரி 8) காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளது. 

அதேபோல், தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்திலும் வருமானவரி துறையினர் சோதனை செய்து வருகின்றனர். மேலும், தேனாம்பேட்டை, பூக்கடை, திருவொற்றியூர், சாத்தங்காடு உள்ளிட்ட பகுதிகளில் கட்டுமானம் மற்றும் மெட்டல் நிறுவனங்களுக்கு சொந்தமான 6-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி