
சென்னை: வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடிகள் கைது
கன்னிகாபுரம் தாஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (31), பெயின்டர். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து புளியந்தோப்பு கன்னிகாபுரம் கஸ்தூரிபாய் காலனி வழியாக வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் இவரை வழிமறித்து குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளனர். தினேஷ் பணம் இல்லை என கூறியதும் சரமாரியாக அவரைத் தாக்கி விட்டு 500 ரூபாயைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்து புளியந்தோப்பு காவல் நிலையத்தில் தினேஷ் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி புளியந்தோப்பு கஸ்தூரிபாய் காலனி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்கிற பிள்ளை கார்த்திக் (32), வினோத் (32), சூர்யா (23) என மூன்று பேரையும் கைது செய்தனர். மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களைச் சிறையில் அடைத்தனர்.