நடிகர் பரத் நடிப்பில் வெளியான ‘காதல்’ படம் மூலம் பிரபலமானவர் நடிகர் சுகுமார். இவர், திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக துணை நடிகை ஒருவர் சென்னை வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் அந்த துணை நடிகையிடம், திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தி கூறிய சுகுமார், 3 ஆண்டுகளாக அப்பெண்ணிடம் இருந்து நகை, பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.