
சென்னை: 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; பூசாரி கைது
புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் வனிதா (28), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு, கடந்த 2014ம் ஆண்டு திருமணமாகி 7 வயது பெண் குழந்தை உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப பிரச்னை காரணமாக கணவரை பிரிந்து வனிதா தனியாக வாழ்ந்து வருகிறார். இவர், புரசைவாக்கம் பகுதியில் உள்ள தனியார் நகைக்கடையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 16ம்தேதி வனிதா வழக்கம்போல வேலைக்குச் சென்று விட்டார். தனது 7 வயது மகளை புளியந்தோப்பு பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். அப்போது, குழந்தை தனது பாட்டி வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது, எதிர்வீட்டின் அருகே வசிக்கும் சேகர் என்பவர் சிறுமியிடம் வீட்டில் டிவி பார்க்கலாம் வா என அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, சிறுமியின் ஆடைகளை கழற்றி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மேலும், இதுகுறித்து வெளியே சொல்லக்கூடாது என மிரட்டி சிறுமியை அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து, சேகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.