மைலாப்பூர் - Mylapore

சென்னை: ராமதாஸின் கேள்வி: முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

பாமக நிறுவனர் ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை என்று அதானியுடனான சந்திப்பு குறித்த ராமதாஸின் அறிக்கை தொடர்பான கேள்விக்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார். சென்னை எழில் நகரில் ‘நமக்கு நாமே’ திட்டத்தில் 5 வகுப்பறைகளுடன் சீரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டிடத்தில் அமைந்துள்ள மாண்டிசேரி மழலையர் வகுப்புகளை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதானி- முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு குறித்த ராமதாஸின் அறிக்கை தொடர்பான கேள்விக்கு, பாமக நிறுவனர் ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை என்று முதல்வர் கூறினார். அதேபோல், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளதால் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ஏற்படும் மழை பாதிப்பை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருக்கிறது என்று கூறினார்.

வீடியோஸ்


சென்னை
சென்னை: வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
Nov 25, 2024, 17:11 IST/

சென்னை: வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

Nov 25, 2024, 17:11 IST
கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று(நவ.25) காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.  அதனைத் தொடர்ந்து இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது, இலங்கை திரிகோணமலையிலிருந்து தென்கிழக்கே, நாகபட்டினத்திலிருந்து தென்கிழக்கே, புதுவையிலிருந்து தென்கிழக்கே சென்னையிலிருந்து தென்கிழக்கே 940 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மேலும், அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 18 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துகொண்டிருப்பதாகவும், அடுத்த 12 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.