சென்னை: வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

69பார்த்தது
சென்னை: வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று(நவ.25) காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. 

அதனைத் தொடர்ந்து இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது, இலங்கை திரிகோணமலையிலிருந்து தென்கிழக்கே, நாகபட்டினத்திலிருந்து தென்கிழக்கே, புதுவையிலிருந்து தென்கிழக்கே சென்னையிலிருந்து தென்கிழக்கே 940 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும், அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 18 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துகொண்டிருப்பதாகவும், அடுத்த 12 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி