துறைமுகம் - Harbour

சென்னை: தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் அமலுக்கு வருகிறது: அரசு

சென்னை: தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் அமலுக்கு வருகிறது: அரசு

தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்க அறிக்கைக்கு ஒப்புதல் அளித்ததுடன், இயக்கத்தை அமல்படுத்த, ரூ. 13. 93 கோடி நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் தொழில்நுட்பத்துறை இன்று வெளியிட்ட அரசாணையின் விவரம், தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில் நிதியமைச்சர், “உலகளவில் அண்மைக் காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள புதிய தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு குறித்தும், அது தமிழ்ச்சமூகத்தின் பல்வேறு தரப்பிலும் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்தும், இந்த அரசு கவனமுடன் ஆய்வு செய்து வருகிறது.  கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்துறை, ஆராய்ச்சி மற்றும் மருத்துவத்துறைகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன் வாய்ப்புகள் குறித்த ஆக்கபூர்வ வழிகாட்டுதல்களையும், இப்புதிய தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை வழிநடத்தத் தேவைப்படும் வரையறைகளை தெளிவாக வகுக்கவும், முதல்வர் தலைமையில் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் ஒன்று ஏற்படுத்தப்படும். மேலும், இந்த இயக்கத்தை செயல்படுத்தும் அமைப்பாக தமிழ்நாடு மின்னாளுமை முகமை இயங்கும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை கவனமாக பரிசீலித்த தமிழக அரசு, தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்க அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளதுடன், இதற்காக ரூ. 13. 93 கோடி நிதியை ஒதுக்கியும் ஒப்புதல் அளித்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

வீடியோஸ்


சென்னை