பரமக்குடியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் பள்ளி ஆசிரியர் ஆவார். இவர் கடந்த 2017-ல் மாணவிகளிடம் சாதி ரீதியாகப் பேசி, அநாகரிகமாக நடந்து கொண்டதாக 34 மாணவிகள் மற்றும் 8 ஆசிரியைகள் புகார் அளித்தனர். இது குறித்த விசாரணையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அதை ரத்து செய்யுமாறு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். மனுவை நேற்று (நவ. 06) விசாரித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.