சென்னை: டிசம்பரில் சட்டப்பேரவை கூட்டம் - விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு

70பார்த்தது
சென்னை: டிசம்பரில் சட்டப்பேரவை கூட்டம் - விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவையின் அடுத்த கூட்டம் டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப். 12ம் தேதி ஆளுநர் ஆர். என். ரவி உரையுடன் தொடங்கியது. வழக்கமாக ஜனவரி மாதம் நடைபெற வேண்டிய ஆண்டு முதல் கூட்டம், இந்தாண்டு புயல், மழை மற்றும் நிவாரணப் பணிகளால் தாமதமாகியது. தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று, பிப். 15ம் தேதி முதல்வர் பதிலுரையுடன் அவை நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.

தொடர்ந்து, பிப். 19ம் தேதி தமிழக அரசின் 2024-25ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். தொடர்ந்து 20ம் தேதி வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தனர். பின்னர் பிப். 22ம் தேதி வரை இரு பட்ஜெட்கள் மீதான விவாதம் நடத்தப்பட்டு, இறுதியில் அமைச்சர்கள் பதிலுரை அளித்தனர்.

அதன்பின், துறைகள் தோறும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம், கடந்த ஜூன் 20 முதல் 29ம் தேதி வரை 10 நாட்கள் நடத்தப்பட்டன. பேரவை விதிகள் படி பேரவையின் ஒரு கூட்டம் முடிவுற்றால், அடுத்த 6 மாதங்களில் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில், வரும் டிசம்பர் இறுதிக்குள் சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில், வரும் டிசம்பர் முதல் வாரத்தில் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி