14 கொள்கைகளுக்கு அமெரிக்க நிறுவனங்கள் பாராட்டு: முதல்வர்

74பார்த்தது
தமிழக அரசு வெளியிட்ட 14 கொள்கைகள் குறித்து, அமெரிக்க பயணத்தின்போது அந்நாட்டு நிறுவனங்களிடம் விளக்கினேன். அவர்கள் பாராட்டினர் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக கடந்த ஆகஸ்ட்28 முதல் செப்டம்பர் 12-ம் தேதிவரை அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் அரசுமுறை பயணம் மேற்கொண்டார். இந்த நிலையில், தனது பயண அனுபவத்தை தொண்டர்களுடன் பகிரும் வகையில் கடித தொகுப்பாக வெளியிட்டுள்ளார்.

‘அமெரிக்க பயணச் சிறகுகள் (1)’ என்ற தலைப்பிலான முதல் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளதாவது, உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான நோக்கியா, அதைத்தொடர்ந்து, பே-பால், ஈல்டு இன்ஜினீயரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்ஃபிங்ஸ் ஹெல்த்கேர் நிறுவனம், அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனத்தினர் என்னை சந்தித்தனர். இதன்மூலம் ரூ. 1, 800 கோடி முதலீட்டில் 4, 100 பேருக்கு வேலை அளிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டிய அமெரிக்க நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில் நம்தமிழகத்தை சேர்ந்தவர்கள் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இந்த சந்திப்பின்போது, கடந்த 3 ஆண்டுகளில் தொழில் வளர்ச்சிக்காக வெளியிடப்பட்டுள்ள 14 கொள்கைகள் அடங்கிய வெளியீடுகளை அமெரிக்க நிறுவனங்களிடம் வழங்கி, அவற்றை விளக்கினேன். நமது கொள்கை குறிப்புகளை அவர்கள் பாராட்டினர் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி