அண்ணா நகர் - Anna nagar

நிர்மலா சீதாராமனை கண்டித்து, நாளை காங்கிரஸ் போராட்டம்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து நாளை(செப்.14) கோவை ஆர். எஸ். புரம், காந்தி பூங்கா ரவுண்டானாவில் தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜிஎஸ்டி தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்ட போது கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் எழுப்பிய கோரிக்கையை உதாசீனப்படுத்தி ஆணவத்துடன் நடந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து நாளை மாலை 3 மணியளவில் கோவை ஆர். எஸ். புரம், காந்தி பூங்கா ரவுண்டானாவில் கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி. எம். சி. மனோகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் நான் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்துகிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர்கள் சொர்ணா சேதுராமன், எம். என். கந்தசாமி, டாக்டர் அழகு ஜெயபாலன் மற்றும் மாநில , மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார்கள். இத்தகைய ஜனநாயக விரோத போக்குக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோவையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு பெருந்திரளானவர்கள் பங்கேற்று எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

வீடியோஸ்


சென்னை
Sep 14, 2024, 04:09 IST/சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி

கார் பந்தயத்தை நிறுத்த நிறைய பேர் பிளான் செய்தனர் - உதயநிதி

Sep 14, 2024, 04:09 IST
மக்கள் நடமாட்டம், வாகன நெரிசல் மிகுந்த பகுதியில் கார் பந்தயம் நடப்பதால் கண்டிப்பாக டிராபிக் ஜாம் ஆகும். அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி இந்த போட்டியை எப்படியாவது நிறுத்திவிடவேண்டும் என்று நிறைய பேர் பிளான் செய்தனர் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னையில் நடந்த F4 கார் பந்தயத்தில் பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், சின்ன விபத்து நடந்தால் கூட அதை ஊதி பெரிதாக்க நிறைய பேர் காத்திருந்தனர். ரேஸ் தடத்தில் ஒரு நாய்குட்டி ஓடி வந்ததை கூட விமர்சனம் செய்தனர். இது F4 பந்தயம் தான். F1 பந்தயத்தில் கூட நாய்குட்டி, முயல்குட்டி, மான்குட்டி எல்லாம் ஓடிவரும். இதுகூட தெரியாத அறிவாளிகள்தான் இது கார் ரேஸா, நாய் ரேஸா என்று நம்மை விமர்சனம் செய்தனர். ஆனால் அதையெல்லாம் தவிடுபொடியாக்கி இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறோம் என தெரிவித்தார்.