திருச்சி: சார் பதிவாளர்கள் சங்க மாநிக கூட்டம்..
தமிழ்நாடு சார் பதிவாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் 22.12.2024 அன்று திருச்சி, தோழர் .எம் .ஆர் .அப்பன் இல்லம் ,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மேற்படி கூட்டத்திற்கு வருகை தந்தவர்களை மாநில அமைப்பு செயலாளர் திரு. சோ .பசுபதி வரவேற்றார். கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் திரு. மகேஷ் தலைமை தாங்கினார். பொருளாளர் திரு . ஞா .கார்த்திகேயன் வரவு செலவு அறிக்கை வாசித்தார். மேற்படி பொதுக்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக பதிவுத்துறை மாநில பணி அலுவலர் சங்க மாநிலத் தலைவர் திரு.செந்தூர்பாண்டியன், பொதுச் செயலாளர் திரு.ஆர். உத்தம சிங், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் திரு. கா .பால்பாண்டி ,மாவட்ட செயலாளர் திரு.எஸ் .நவநீதம், பதிவுத்துறை அமைச்சுப் பணியாளர் சங்க நிர்வாகி திரு. அறிவொளி, பதிவுத்துறை அடிப்படை பணியாளர் சங்க நிர்வாகி திரு.எஸ். சம்பத்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.பொதுக்குழுவில் பணியிட மாறுதல் பொது கலந்தாய்வு மூலம் நடத்துதல், பணியிடை நீக்கத்தில் உள்ள பணியாளர்களுக்கு பணி வழங்குதல், பதிவுத்துறை பணியாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்தல், பதவி உயர்வினை உரிய காலங்களில் வழங்குதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல், சனிக்கிழமை விடுமுறை நாளில் செயல்படும் 100 சார் பதிவாளர்களுக்கு செயல்பாட்டில் இருந்து விலக்கு அளித்தல் ,சார் பதிவாளர்களின பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஏற்கனவே எடுக்கப்பட்ட உயர்மேடை மற்றும் சுற்றிலும் தடுப்பு அமைத்தல் ஆகியவற்றை மீண்டும் அமைக்க கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றக்கோரி தீர்மானங்கள் இய ற்றப்பட்டன. இறுதியாக மாநில பொதுச் செயலாளர் தா .மணி ராஜ் நிறைவுரை ஆற்றினார்.மண்டல பொருளாளர் திரு ஜி. கே. செந்தில்குமரன் நன்றி உரையாற்றினார்.