திருச்சி: கனமழை..தேர்வு ஒத்திவைப்பு: வெளியான அறிவிப்பு
திருச்சி பாரதிதாசன் பல்கலைகழத்தில் நாளை (நவம்பர் 27) நடைபெற இருந்த இளநிலை, முதுநிலை பருவத்தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்குரிய மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பல்கலைகழக நிர்வாகம் அறிவித்துள்ளது.