திருச்சி உளவியல் ஆலோசகர் தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம் பரணிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் இவர் திருச்சியில் உள்ள தனியார் மனநல மருத்துவமனையில் உளவியல் ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார் நாச்சிகுறிச்சி பகுதியில் வாடகை வீட்டில் தங்கி உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் (அக்.,28) திங்கட்கிழமை அன்று அதிக அளவு மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இருந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பெயரில் சோமரசம்பேட்டை போலீசார் அவரது உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.