தீபாவளியை முன்னிட்டு ஆவினில் தற்போது வரை ரூ. 115 கோடிக்கு உணவு பொருட்கள் விற்பனை ஆகியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில், “தீபாவளியை முன்னிட்டு பல்வேறு வகையான இனிப்புகள் ஆவினில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொது மக்களிடம் சிறப்பு இனிப்புகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த ஆண்டை விட ரூ. 10 கோடிக்கு அதிகமாக இனிப்பு, கார வகைகள் விற்கப்பட்டுள்ளதாக” கூறப்பட்டுள்ளது.