திருவரம்பூர்: குடும்ப தகராறு; கணவன் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் பாலமுத்து இவருக்கும் அபிநயா என்ற பெண்ணுக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு நடைபெறும் என கூறப்படுகிறது. சம்பவம் நடந்த 19-ம் தேதி அன்று மனைவியிடம் ஏற்பட்ட தகராறில் மனவிரக்தியில் இருந்த பாலமுத்து கீழக்குறிச்சி ஊராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவருடைய தந்தை அளித்த புகாரின் பேரில் திருவரம்பூர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.