ஐபிஎல் 2025 தொடரில் விராட் கோலி மீண்டும், பெங்களூர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டூப்ளெசிஸ் ஏலத்திற்கு முன்பே அணியில் இருந்து விடுவிக்கப்படுவார் என்றும், அதன் காரணமாக கோலி மீண்டும் கேப்டனாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. கோலி ஏற்கனவே நிர்வாகத்துடன் பேசி வந்ததாகவும், RCB முகாமில் தலைமைத்துவ வெற்றிடம் இருக்கும் நேரத்தில் முன்னேற விரும்புவதாக பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.