திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள ரங்கநாதசுவாமி கோயில் தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய பரப்பளவு கொண்ட கோயில் ஆகும். இந்தக் கோயில் வளாகம் 156 ஏக்கர் பரப்பளவை கொண்டுள்ளது. இந்தக் கோயிலில் 21 கோபுரங்கள் அமைந்துள்ளன. கோயிலின் ராஜ கோபுரமானது ஆசியாவிலேயே மிக உயர்ந்த கோபுரம் ஆகும். தமிழ்நாட்டில் அதிக பக்தர்கள் வந்து செல்லும் கோயில்களில் ஒன்றாக ஸ்ரீரங்கம் விளங்குகிறது. இங்கு பெருமாள் சயன கோலத்தில் காட்சி தருகிறார்.