மும்பையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு, மென்பொறியாளர் அசோக் தேஷ்முக் (31) உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 10வது ஓவரின் போது லேசாக நெஞ்சில் வலி ஏற்பட்டபோதும், அணியின் வெற்றிக்காக தொடர்ந்து விளையாடியுள்ளார். 17வது ஓவரில் ரன் எடுக்க ஓடியபோது சரிந்து விழுந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.