சென்னை பூக்கடை பகுதியில் நேற்று முன்தினம் (டிச. 16) நடந்த வழிப்பறி சம்பவத்தின் சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், இரு சக்கர வாகனத்தில் வரும் நான்கு நபர்கள் எதிரே இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த நபரை மிரட்டி கத்தி முனையில் அவரிடம் இருந்த பையை எடுத்து செல்வது பதிவாகியுள்ளது. வீடியோ வைரலான நிலையில் குற்றவாளிகளை தேடும் போலீசார் பாதிக்கப்பட்ட நபரையும் தேடுகின்றனர்.