பள்ளி வாகனத்தில் சிக்கி உயிரிழந்த 2 வயது பிஞ்சு

82பார்த்தது
பள்ளி வாகனத்தில் சிக்கி உயிரிழந்த 2 வயது பிஞ்சு
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கண்டுகுரு மண்டலம் அனந்தசாகரம் கிராமத்தைச் சேர்ந்த கோகினேனி ஸ்ரீகாந்த்-நாகமணி தம்பதிக்கு பார்கவ் மற்றும் மோக்ஷக்னா (2) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், எல்கேஜி படித்து வரும் பார்கவை வழக்கம்போல பள்ளிப் பேருந்தில் ஏற்றி விட தனது தாயுடன் சென்ற மோக்ஷக்னா, வாகனத்தின் டயருக்கு அடியில் விழுந்து உடல் நசுங்கி உயிரிழந்தார். மகனின் உடலைப் பிடித்துக் கொண்டு பெற்றோர் கதறி அழுதது அனைவரையும் கண்ணீரை வரவழைத்தது.

தொடர்புடைய செய்தி