திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் லியோனி, சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டான "யார்ரா அந்த பையன்? நான் தான் அந்த பையன்" என்ற பாடல் எடப்பாடி பழனிசாமிக்கு அப்படியே பொருந்தும் என கூறினார். மேலும், 'யார்ரா அந்த பழனிசாமி? நான் தான் அந்த பழனிசாமி, 10 தடவை தோத்து போன நான் தான் அந்த பழனிசாமி' என கலாய்த்து அந்த பாடலை பாடினார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.