அம்பேத்கர் குறித்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு த.வெ.க தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன் என விஜய் பதிவிட்டுள்ளார். 'அம்பேத்கரின் பெயரை பயன்படுத்துவது இப்போது ஒரு "பேஷன்" ஆகிவிட்டது' என அமித் ஷா பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.