கேன்சர் எனப்படும் புற்றுநோய்க்குத் தடுப்பூசியைக் கண்டுபிடித்திருப்பதாகவும் இது 2025 முதல் இலவசமாக சந்தையில் கிடைக்கும் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது. எம்ஆர்என்ஏ (mRNA) அடிப்படையிலான இந்த தடுப்பூசி, கேன்சர் நோயை குணப்படுத்தும் என ரஷ்யா நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குனர் ஆண்ட்ரி கப்ரின் உறுதிப்படுத்தி உள்ளார்.