நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து பேசியது சர்ச்சையானது. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “அம்பேத்ரைப் பற்றி நாடே பேசுகிறது என்பதை சாவர்க்கரின் வாரிசுகளால் எப்படி பொறுத்துக் கொள்ளமுடியும்? எவ்வளவு வயிற்றெரிச்சல் என்பதை அமித்ஷா வெளிப்படுத்தி விட்டார். தனது முகத்திரையைத் தானே கிழித்துக் கொண்டார். அம்பேத்கர் விஸ்வரூபம் எடுக்கிறார். சனாதனிகளின் சதி முயற்சிகள் சாம்பலாகும்” என்றார்.