நாடாளுமன்றத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “எதெற்கெடுத்தாலும் அம்பேத்கர்.. அம்பேத்கர்.. என சொல்கிறார்கள்” என பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, “அம்பேத்கரின் பெயரைக் கேட்டாலே எரிச்சல் வருகிறது என்றால், இன்னும் பல நூறுமுறை அண்ணலின் பெயரை குரல் உயர்த்திச் சொல்வோம்” என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ‘X’ தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.