நெல்லை சந்திப்பில் துவைத்து காயப்போடும் துணிகளில் பெண்களின் உள்ளாடைகள் மட்டும் தொடர்ந்து திருட்டு போனது. அப்பகுதியினர் சிசிடிவி காட்சிகள் மூலம் தேடியதில்,
50 வயது மதிக்கத்தக்க ஆசாமி ஒருவர் வீடு, வீடாக சென்று பெண்களின் உள்ளாடைகளை நைசாக திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. போலீசார் விசாரணை நடத்தியதில்,
தச்சநல்லூரைச் சேர்ந்த தாணப்பன் (52) என்பவர் உள்ளாடைகளை திருடியது தெரியவந்தது.
4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர்.