கேரம் உலக சாம்பியன் பட்டம் வென்ற காசிமாவுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் 6-வது உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில், தமிழக வீராங்கனை காசிமா (17), 3 தங்கப் பதக்கங்களை வென்றார். முன்னதாக காசிமாவின் பயணத்திற்காக, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ரூ.1.50 லட்சம் வழங்கி வாழ்த்தி அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.