ஆந்திரா: லாரியிலிருந்து பார்சலை இறக்கியபோது ஏற்பட்ட வெடி விபத்து சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. காக்கிநாடா பகுதியில் உள்ள டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் நின்றிருந்த லாரியிலிருந்து தொழிலாளர்கள் இன்று(மார்ச்.3) காலை பார்சல் பண்டல்களை இறக்கினர். அப்போது ஒரு பார்சல் பண்டலை தரையில் போட்டதில் அதிலிருந்த வெங்காய வெடிகள் திடீரென வெடித்தது. இதில் 4 பேர் காயமடைந்தனர். ஹைதராபாத்திலிருந்து அனுப்பப்பட்ட அந்த பார்சல் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.