சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரையில் உயிர்ம வேளாண் விளைபொருட்களுக்கு தர நிர்ணய ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் அவர், தர நிர்ணய ஆய்வகங்கள் அமைக்க ரூ.6.16 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்துள்ளார்.