9ஆம் வகுப்பு மாணவன் மரணம்: ஆசிரியர்கள் பணியிட மாற்றம்

68பார்த்தது
9ஆம் வகுப்பு மாணவன் மரணம்: ஆசிரியர்கள் பணியிட மாற்றம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசுப்பள்ளி வளாகத்தில் 2 மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 9ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 26ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஷ்வரி நடவடிக்கை எடுத்துள்ளார். மற்றொரு சக மாணவனுடன் ஏற்பட்ட மோதலில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் 9ஆம் வகுப்பு மாணவன் பலியானதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி