5 வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் அவர், கடலூரின் நல்லூர் வரகு, நாகையின் வேதாரண்யம் முல்லை, திண்டுக்கல் நத்தம் புளி, திண்டுக்கல் ஆயக்குடி கொய்யா, திண்டுக்கல் கப்பல்பட்டி கரும்பு முருங்கை ஆகிய 5 வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படும் என அறிவித்தார்.