9 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் தலா 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், ரூ.20 கோடி மதிப்பீட்டில் 9 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் என்றார். இதன் மூலம் மழை, இயற்கை பேரிடர் காலங்களில் வேளாண் உற்பத்தி பொருட்கள் நாசமாகாமல் தடுத்து பாதுகாக்கப்படும்.