தெலங்கானா மாநிலம் ஹனம்கொண்டா என்னும் பகுதியில், சாலியில் கிரானைட் ஏற்றிச் சென்ற லாரி மீது, அதிவேகமாக கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. லாரியில் மோதிய கார், நிலைதடுமாறி அருகில் இருந்த பைக் மீது மோதியது. இதில், பைக் ஓட்டுநர் தூக்கி வீசப்பட்டார். தொடர்ந்து, அந்த லாரி அங்கிருந்த மின் விளக்கும் மீது மோதியதில், அங்கிருந்த விளக்குகள் அணைந்தன. இந்த கோர விபத்து சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.