தமிழக அரசின் 2025-26 நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை துறைக்கான அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்துவருகிறார். அவரது பட்ஜெட் உரையில், பாரம்பரிய காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க ரூ. 2.40 கோடியில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். வெங்காயத்தை சேமித்து வைத்து விற்பனை செய்ய கிடங்கு அமைக்க மானியம் வழங்க ரூ. 18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.